விடுதலைப் பெற்று 75 ஆண்டுகள் கடந்ந பிறகும்
இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகள் நிறைவுற்றப் பிறகும்
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம் மற்றும் கூறு 14, 21 மற்றும் 41 ஆகியவற்றுக்கு எதிராக வாய்பிற்கும் வசதிக்கும் ஏற்றார் போல் சமமற்ற பள்ளி முறைமையை அணுமதிக்கும், சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிராக பாகுபாட்டை ஊக்குவிக்கும் தேசியக் கல்விக் கொள்கை 2020 ஏற்க மாட்டோம்!
கணிணி அறிவியல் வளர்ந்துவிட்ட காலத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளக் காலத்தில் இவற்றுக்கான வாய்ப்புகளை உறுதிப் படுத்தாமல் கூடுதல் மொழியைப் படிக்க வற்புறுத்தி குழந்தைகளை துன்புறுத்தும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம்!
தொடக்கப் பள்ளிகளில்
கணினி ஆசிரியர் கொடு!
விளையாட்டு ஆசிரியர் கொடு!
நூலகம் – நூலகர் கொடு!
துப்புரவு தொழிலாளர், பாதுகாவலர், அலுவலக ஊழியர்கள் கொடு!
இவற்றை உறுதிசெய்ய
அரசின் முழுப் பொறுப்பிலும் செலவிலும் அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பை உறுதிசெய்யும் கல்விக் கொள்கை வேண்டும்!
இறையாண்மைக் கொண்ட இந்திய மக்களாகிய நாங்கள் கோருகிறோம்
ஒன்றிய அரசே!
பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்ட தேசியக் கல்விக் கொள்கை 2020யை திரும்பப் பெறு!
கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களின் படி சமமான கற்றல் வாய்ப்பபை உறுதிசெய்யும் கல்விக் கொள்கையை மாநில அரசு உருவாக்கிட வேண்டும்!
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு செய்தியாளர் சந்திப்பு







